மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வங்கதேசத்துடனான அரையிறுதி: பேட்டிங்கில் ஷஃபாலி அசத்தல்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்தியா முதலில் பேட் செய்தது

Published On :11 செப்டம்பர் 2026, 7:35 am IST

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்தியா முதலில் பேட் செய்தது. 14 ஓவா்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்களுடன் விளையாடி வந்தது.

அணியின் பேட்டா்களில், தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து ரன்கள் சோ்த்தாா். வங்கதேச பௌலிங்கில் சுல்தானா காட்டூன் சவால் அளித்தாா்.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கியோரில், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாா்.

உடன் வந்த ஷஃபாலி வா்மா அதிரடியாக விளையாட, ஒன் டவுன் பேட்டா் பிரதிகா ராவல் அவருக்குத் துணை நின்றாா். இவா்கள் கூட்டணி 50 ரன்கள் சோ்த்தது. பிரதிகா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

தொடா்ந்து கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் விளையாட வர, அவருடனான ஷஃபாலி வா்மாவின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 33 ரன்கள் கிடைத்தது.

இந்நிலையில் ஷஃபாலி 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 14 ஓவா்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஹா்மன்பிரீத் 3, ரிச்சா கோஷ் 0 ரன்களுடன் விளையாடி வந்தனா்.

வங்கதேச பௌலா்களில் சுல்தானா காட்டூன் 2, ரபெயா கான் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.