மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஞ்சி கோப்பை: ரயில்வேஸ் 126 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் ரயில்வேஸ் அணி, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது.

Ranji Trophy: Railways take a 126-run lead

ரயில்வேஸ் 126 ரன்கள் முன்னிலை - PTI

Published On :28 அக்டோபர் 2026, 2:08 am IST

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் ரயில்வேஸ் அணி, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது. மொத்தமாக அந்த அணி 126 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ரயில்வேஸ் முதல் இன்னிங்ஸில் 184 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது ஆட்டத்தை தொடங்கிய தமிழ்நாடு அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

அணியின் இன்னிங்ஸை பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தொடர்ந்தனர். இதில் இந்திரஜித் 1 பவுண்டரியுடன் 59 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அவருக்கு முன்பாக விடைபெற்றனர்.

தமிழ்நாடு இன்னிங்ஸ் 165 ரன்களுக்கு நிறைவடைந்தது. ரயில்வேஸ் தரப்பில் ராஜ் செüதரி 5, தௌஃபிக் உத்தின் மொந்தல் 4, ஹிமான்ஷு சங்வான் 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 19 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வேஸ், செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சஹப் யுவராஜ் சிங் 2 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்க்க, இதர பேட்டர்கள் சோபிக்காமல் போயினர். ஆட்டநேர முடிவில் பிரத்யுமன் பாரிக் 2, ஹிமான்ஷு சங்வான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தமிழ்நாடு பௌலர்களில் கேப்டன் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் ஹேமசுதேசன் 3, குர்ஜப்னீத் சிங், அஜித் ராம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.