தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரராக மெஸ்ஸி உலக சாதனை!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்ற பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருது குறித்து...

Lionel Messi waves after receiving the Princess of Asturias Award for Sports during a ceremony in Oviedo, northern Spain, Friday, Oct. 23, 2026. (AP Photo/Miguel Oses)

பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி - படம்: ஏபி

Published On :24 அக்டோபர் 2026, 12:25 pm IST

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி முதல்முறையாக ஸ்பெயினின் மிக உயரிய ‘பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்’ விருதை வென்றுள்ளார்.

தனியொரு கால்பந்து வீரராக முதல்முறையாக இந்த விருதை வென்றவராக மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் கால்பந்து அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஸ்பெயினின் மிக உயரிய ‘பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்’ விருதை முதல்முறையாக தனியொரு கால்பந்து வீரராக மெஸ்ஸி வென்றுள்ளார்.

முன்னதாக, 2010ல் ஸ்பெயின் கால்பந்து அணியும், 2012ல் இகெர் கேசில்லாஸ், ஸவி ஹெர்னாண்டஸ் இணைந்து இந்த விருதை வென்றுள்ளார்கள். மற்ற விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் (டென்னிஸ்), கரோலினா மாரின் (பாட்மின்டன்), ரஃபேல் நடால் (டென்னிஸ்), ஃபெர்னான்டோ அலோன்ஸோ (எப்ஃ1) போன்றவர்கள் வென்றுள்ளார்கள்.

உலகக் கோப்பைக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார். பிறகு அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. அந்தப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த நிலையில், இந்த விருது வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் இளவரசி லியோனோர் இந்த விருதை மெஸ்ஸிக்கு வழங்கினார். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் என இந்த விருதை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

தற்போது மெஸ்ஸி அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

Summary

Leo Messi became the first individual footballer to receive the Spain's Princess of Asturias Award for Sports

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.