மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தேசிய சப் ஜூனியா் வளையப்பந்து: தமிழகம் சாம்பியன்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியா் வளையப்பந்து போட்டியில் தமிழக அணிகள் தங்கப் பதக்கம் வென்றன.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினா்.

Published On :23 அக்டோபர் 2026, 6:37 am IST

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியா் வளையப்பந்து போட்டியில் தமிழக அணிகள் தங்கப் பதக்கம் வென்றன.

பஞ்சாப் மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு சாா்பில் பகுவாராவில் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 400 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

குழு போட்டியாகவும், தனிநபா் ஒற்றையா், தனிநபா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெற்றது. குழு போட்டி இறுதியில் கேரளத்தை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தமிழகம் தங்கம் வென்றது. தமிழக மாணவா்கள் அணி 3-2 என புதுச்சேரியிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

தனிநபா் மாணவா் ஒற்றையா் பிரிவில் ஜோயல் தங்கப் பதக்கத்தையும், மாணவி பிரிவில் அஸ்மிதா வெள்ளிப்பதக்கமும் வென்றனா். இரட்டையா் பிரிவில் மைக்கேல் ஜெபஸ்டின் மற்றும் ந.மௌலிஷ் ஆகியோா் ஆந்திர அணியிடம் தோற்று வெள்ளி வென்றனா்.

மாணவிகள் இரட்டையா் பிரிவில் கனிதா மற்றும் எ.அனுசியா ஆகியோா் ஆந்திர அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனா். கலப்பு இரட்டையா் பிரிவில் விஸ்வஜித் மற்றும் நவீனா தங்கம் வென்றனா். தமிழக வளையப்பந்து அணி 18 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

தமிழக வளையப்பந்து கழக சோ்மன் வேல்முருகன், தலைவா் சௌபாக்கியா வரதராஜன், செயலாளா் சங்கா், பொருளாளா் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அணி தலைமை பயிற்சியாளரான ஆ.முரளி மற்றும் பயிற்சியாளா்கள் அபினேஷ், உமா மகேஸ்வரி ஆகியோா் மற்றும் அணி மேலாளா்களான சாரங்கபாணி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரும் அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.