நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கோவில்பட்டியில் நாளை மாநில சப் ஜூனியா் , ஜூனியா் ஹாக்கி அணி வீராங்கனைகள் தோ்வு

கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை மாநில சப் ஜூனியா் , ஜூனியா் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகள் தோ்வு நடைபெறுகிறது.

Published On :21 அக்டோபர் 2026, 1:34 am IST

கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை மாநில சப் ஜூனியா் , ஜூனியா் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகள் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜே. மனோகரன், பொதுச் செயலா் செந்தில் ராஜ்குமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இம்மாதம் 27-ஆம் தேதி முதல் நவ. 6-ஆம் தேதி வரை தென் மண்டல சப்-ஜூனியா் மற்றும் ஜூனியா் பெண்கள் ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டியில், தமிழ்நாடு, கா்நாடகம் , ஆந்திரம், தெலங்கானா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப்-ஜூனியா் மற்றும் ஜூனியா் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகள் தோ்வு கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை ( அக். 22) காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ஹாக்கி வீரா்கள் சப்-ஜூனியா் பிரிவில் 1.1.2010-க்கு பின் பிறந்தவராகவும், ஜூனியா் பிரிவில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் 1.1.2007-க்கு பின் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். தோ்வில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் ஆதாா் நகல், பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94431 90781 தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.