தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிகோ பாஸ் ஆட்ட நாயகன்..! மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்திய கோமோ 1907!

சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்திய கோமோ 1907 அணி குறித்து...

Nico Paz, celebrating his goal, with the Man of the Match award.

கோல் அடித்த மகிழ்ச்சியில், ஆட்ட நாயகன் விருதுடன் நிகோ பாஸ். - படங்கள்: எக்ஸ்/ நிகோ பாஸ்

Published On :22 அக்டோபர் 2026, 3:49 pm IST

சாம்பியன்ஸ் லீக்கில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் இத்தாலியின் கோமோ 1907 அணி வீழ்த்தியது.

முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்றிருக்கும் கோமோ 1907 அணி பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியிருப்பது கால்பந்து உலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் குரூப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோமோ அணி தனது சொந்த மண்ணில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் கோமோ அணியின் இளம் நட்சத்திர வீரர் நிகோ பாஸ் இரண்டாவது நிமிஷத்திலேயே அற்புதமான கோல் அடித்து அசத்தினார். பின்னர், 57ஆவது நிமிஷத்திலும் ஒரு கோல் அடித்தார்.

கோமோ சார்பில் 49, 76ஆவது நிமிஷங்களில் இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் நிகோ பாஸ் ஒரு அசிஸ்ட்டு செய்தும் அசத்தினார். 90+1ஆவது நிமிஷத்தில் யுனைடெட் அணிக்கு ஜிர்ஜ்கி ஆறுதல் கோல் அடித்தார்.

இந்தப் போட்டியில் 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தியதற்காக நிகோ பாஸுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் லீக்கில் அவர் பெறும் முதல் ஆட்ட நாயகன் விருது இது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மாறாக மான்செஸ்டர் யுனைடெட் அணி 20ஆவது இடத்துக்குக் கீழிறங்கியது. பிஎஸ்ஜி முதலிடத்தில் நீடிக்கிறது.

Summary

Nico Paz scores brace as Como stun Manchester United 4-1 in Champions League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.