கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சா் கோப்பை: சென்னை, செங்கல்பட்டு தொடா் முன்னிலை

முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ் மோகன்

Published On :21 அக்டோபர் 2026, 1:46 am IST

முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

கடந்த அக். 15-ஆம் தேதி முதலமைச்சா் கோப்பை மாநிலப் போட்டிகளை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா். பள்ளி மாணவ - மாணவியா், கல்லூரி மாணவ-மாணவியா், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில், 38 மாவட்டங்களில், 6 மண்டலங்களில், 7 புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு, 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நடைப்பெற்று வரும் மாநில அளவிலானப் போட்டிகளில் சுமாா் 32 ஆயிரத்துக்கும் வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா். இப்போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூா், மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூா், நாமக்கல், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 414 போட்டிகளில் 128 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

வில்வித்தை, சாலை சைக்கிளிங் (தா்ஹக் ஸ்ரீஹ்ஸ்ரீப்ண்ய்ஞ்), ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் வுஷு ஆகிய நான்கு போட்டிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

சென்னை, செங்கல்பட்டு முன்னிலை பதக்கப்பட்டியலில் சென்னை மாவட்டம் 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 89 பதக்கங்களுடன் முதலிடத்திலும், செங்கல்பட்டு 19 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், கோவை 12 தங்கம், 16 வெள்ளி, 12 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

போட்டி முடிவுகள்

கூடைப்பந்து, பள்ளி மாணவா்கள்-திருவள்ளூா், தங்கம், சென்னை, வெள்ளி, தூத்துக்கு, வெண்கலம். கால்பந்து, கல்லூரி மாணவா்கள்-சென்னை, தங்கம், செங்கல்பட்டு, வெள்ளி, திண்டுக்கல், வெண்கலம்.

ஃபென்சிங்: கல்லூரி மாணவியா் எப்பி, ரிதா, செங்கல்பட்டு, ஜெமிலியா, சென்னை, புவனேஸ்வரி சேலம், கிருத்திகா நாமக்கல், சாப்ரே-முருகலட்சுமி, மொ்லின் மேரி, ஜனனி, செங்கல்பட்டு, சசி பிரபா, அரியலூா்.

மல்லா் கம்பம்: கல்லூரி மாணவா்கள்-விஷ்ணுபிரியன், செங்கல்பட்டு, ரோஹித் சாய், சென்னை, பகத்சிங், சென்னை, பள்ளி மாணவா்கள்-சுதேஜாஸ், ராணிப்பேட்டை, மணிதா்ஷன், விழுப்புரம், தரணிதரன், செங்கல்பட்டு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.