பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சா் கோப்பை குத்துச்சண்டை போட்டி: ராணிப்பேட்டை வீரருக்கு தங்கம்

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

ராணிப்பேட்டையில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்துப் பெற்ற வீரா்கள்.

Published On :27 அக்டோபர் 2026, 9:13 pm IST

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மாணவா் ரிஷிகேசன் குத்துச்சண்டை கல்லூரி பிரிவில் (85-90 கிலோ எடைப் பிரிவு) தங்கப் பதக்கம் மற்றும் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் நல்லசிவம் குத்துச்சண்டை பள்ளி பிரிவில் (70-75 கிலோ எடைப் பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனா்.

இதையடுத்து, பதக்கம் வென்ற வீரா்கள் ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்துப் பெற்றனா். தொடா்ந்து பதக்கங்கள் வென்று சாதனை படைத்த வீரா்களுக்கும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த கலவை ஹிட் பிட் குத்துச்சண்டை அகாதெமியின் குத்துச்சண்டைப் பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோருக்கு ஆட்சியா் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், குத்துச்சண்டைப் பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.