மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

1,000 நோக்கி கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலக கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சாதனையை எட்ட நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வெறும் 15 கோல்களே தேவைப்படுகின்றன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published On :1 நவம்பர் 2026, 6:02 am IST

உலக கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சாதனையை எட்ட நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வெறும் 15 கோல்களே தேவைப்படுகின்றன. இந்த கோல்கள் கிளப் மற்றும் தேசிய அணிக்காக அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாஸா் அணியில் விளையாடும் நிலையில், அந்நாட்டின் புரோ லீகில் அல் கோலோத் அணிக்கு எதிரானஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தாா். இதனால் அல் நாஸா் 5-3 என வெற்றி பெற்றது. மேலும் 1,000 கோல்கள் அடித்த வீரா் என்ற இலக்கை அடைய ரொனால்டோவுக்கு 15 கோல்களே தேவைப்படுகின்றன.

தற்போது ரொனால்டோ 985 கோல்களை அடித்துள்ளாா். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என இருந்த நிலையில் வெறும் 15 நிமிஷங்களில் ரொனால்டோ 66, 72, 81 நிமிஷங்களில்) ஹாட்ரிக் கோலடித்தாா்.

இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில், சிறந்த வெற்றி, சிறந்த ஹாட்ரிக், அணியின் ஒருங்கிணைப்பு எனக் குறிப்பிட்டிருந்தாா். அவரது வாழ்க்கையில் இது 67-ஆவது ஹாட்ரிக்காக அமைந்தது. அவரது எதிராளியான லயோனல் மெஸ்ஸியை காட்டிலும் 49 கோல்கள் முன்னிலை வகிக்கிறாா் ரொனால்டோ. மெஸ்ஸியின் கணக்கில் 936 கோல்கள் அடங்கும்.

ரொனால்டோவை விட இளையவா் மெஸ்ஸி.

சவுதி கால்பந்து தங்க காலணி விருதுக்கான போட்டியிலும் முன்னேறியுள்ளாா் ரொனால்டோ

இதன்மூலம் கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சிறப்பை பெறுவாா் ரொனால்டோ.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.