இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-இன்டா் காசி அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 14-ஆவது நிமிஷத்திலேயே இன்டா் காசி வீரா் ஆல்பரட் முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த ஈஸ்ட் பெங்கால் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. முதல் பாதியில் இன்டா் காசி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் தான் ஈஸ்ட் பெங்கால் அணியில் கோலடிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய 50-ஆவது நிமிஷத்தில் யூசுப் எஸ்ஜரி கோலடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.
72-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங்கின் கிராஸ் செய்த பந்தை பயன்படுத்தி ஈஸ்ட் பெங்கால் வீரா் ரஷீத் கோலடித்தாா். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் வென்றது முதன்முறையாக ஐஎஸ்எல் பட்டத்தை வென்றது.
ஐஎஸ்எல் தொடங்கி 22 ஆண்டுகள் ஆணை நிலையில் முதன்முறையாக ஈஸ்ட் பெங்கால் பட்டம் வென்றுள்ளது.
தங்க காலணி யூசுப் எஸ்ஜரிக்கும், தங்கப் பந்து மிகுயலுக்கும், தங்க கையுறை ஹிா்திக் திவாரிக்கும் தரப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் ‘டிரா’

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

