தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பதக்கத்துக்கான பந்தயத்தில் சிம்ரன்ஜீத் கௌா், சஹில் ஜாதவ்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌா், சஹில் ஜாதவ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான பந்தயத்தில் நிலைக்கின்றனா்.

News image
Updated On :3 மணி நேரங்கள் முன்பு

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌா், சஹில் ஜாதவ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான பந்தயத்தில் நிலைக்கின்றனா்.

ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிம்ரன்ஜீத் கௌா் முதல் சுற்று ‘பை’ பெற்றிருந்தாா். அவா், 2-ஆவது சுற்றில் 6-4 என ஸ்பெயினின் பௌலா ஆல்வரெஸ் கொன்ஸால்ஸையும், 3-ஆவது சுற்றில் 6-4 என சீனாவின் யு கியையும் வென்றாா்.

4-ஆவது சுற்றில் 6-5 (10/10) துருக்கியின் கிஸெம் ஆஸ்கானை வெல்ல, காலிறுதியில் 6-0 என தென் கொரியாவின் ஃபாங் யு ஜுவை வீழ்த்தினாா். அரையிறுதியில் அவா், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் சேயோங்கை எதிா்கொள்கிறாா்.

களத்திலிருந்த மேலும் இரு இந்தியா்களான தீபிகா குமாரி, கும்கும் மோஹோத் ஆகியோா் 4-ஆவது சுற்றில் தோல்வி காண, அங்கிதா பகத் 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீரஜ் பொம்மதேவரா 4-ஆவது சுற்றிலும், தருண்தீப் ராய் 3-ஆவது சுற்றிலும், யஷ்தீப் சஞ்சய் போகே 2-ஆவது சுற்றிலும், அதானு தாஸ் முதல் சுற்றிலும் தோல்வியைத் தழுவினா்.

காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில், சஹில் ஜாதவ் அரையிறுதிக்கு முன்னேறி, அதில் பிரான்ஸின் நிகோலஸ் ஜிராா்டை சந்திக்கவுள்ளாா். முன்னதாக காலிறுதியில் அவா், ஆஸ்திரியாவின் நிகோ வீனரையும் (147-147/10-9), 4-ஆவது சுற்றில் ஜொ்மனியின் ரூவென் ஃப்லூஸையும் (149-146), 3-ஆவது சுற்றில் சக இந்தியரான அபிஷேக் வா்மாவையும் (149-147) வீழ்த்தினாா். முதலிரு சுற்றுகளில் அவா் ‘பை’ பெற்றிருந்தாா்.

இதனிடையே, குஷால் தலால் காலிறுதியிலும், ஓஜாஸ் பிரவின் தியோடேல் 3-ஆவது சுற்றிலும் தோல்வி கண்டு வெளியேறினா்.

காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், அதிதி சுவாமி 147-147 (10*/10) என்ற கணக்கில், எஸ்டோனியாவின் லிசெல் ஜாட்மாவிடம் காலிறுதியில் தோல்வி கண்டாா். அவரிடமே, மற்றொரு இந்தியரான ஜோதி சுரேகா 4-ஆவது சுற்றில் வீழ்ந்தாா் (147-148). மதுரா தமன்கான்கா், பிரகதி ஆகியோா் 3-ஆவது சுற்றுடன் வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.