மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

News image
Updated On :5 மே 2026, 5:33 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் டிரா செய்திருந்தாலோ, அல்லது தோற்றிருந்தாலோ பார்சிலோனா சாம்பியனாவது உறுதியாகியிருக்கும். ஆனால் ரியல் மாட்ரிட்டை வெற்றிபெறச் செய்து, வினிசியஸ் ஜூனியர் அதை தாமதப்படுத்தியுள்ளார்.

ரியல் மாட்ரிட்டுக்காக அவர் 55 மற்றும் 66}ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் தனது அடுத்த ஆட்டத்தில் பார்சிலோனாவையே சந்திக்கிறது. அதில் பார்சிலோனா டிரா செய்தாலே, அந்த அணி சாம்பியனாவது உறுதியாகிவிடும்.

மாறாக ரியல் மாட்ரிட் வென்றால், அந்த அணி பட்டத்துக்கான பந்தயத்தில் நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இன்னும் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

பிரீமியர் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் 3}2 என லிவர்பூல் அணியையும், டாட்டன்ஹாம் 2}1 என ஆஸ்டன் வில்லாவையும், போர்ன்மெüத் 3}0 என கிறிஸ்டல் பேலûஸயும் வென்றன.

புள்ளிகள் பட்டியலில் ஆர்செனல் (76), மான்செஸ்டர் சிட்டி (70), மான்செஸ்டர் யுனைடெட் (64) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. போட்டியில் இன்னும் 3 சுற்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.