லா லிகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் ரியல் பெட்டிஸ் மோதிய ஆட்டம் 1-1 என சமனில் முடிவடைந்தது.
ரியல் மாட்ரிட் அணி இந்தப் போட்டியில் வெற்றியைப் பெறாததால், முதலிடத்துக்கான வித்தியாசம் அதிகரித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்து வருகிறது.
சாம்பியன்ஸ் லீக், ஸ்பானிஸ் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை ஆகிய தொடர்களில் கோப்பை வெல்லாத ரியல் மாட்ரிட் அணிக்கு மீதமிருப்பது லா லிகா தொடர் மட்டுமே. இந்தத் தொடரிலும் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரியல் பெட்டிஸ் உடனான போட்டியில் வினிசியஸ் ஜூனியர் 17ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர், 90 நிமிஷங்கள் வரை ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்தப் போட்டியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+4ஆவது நிமிஷத்தில் ஆண்டனியின் அற்புதமான திறமையினால் பந்து எப்படியோ சக ரியல் பெட்டிஸ் வீரர் ஹெக்டர் பெல்லரினிடம் செல்ல, அவர் கோல் அடித்து அசத்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
கடைசி 6 போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணி ஐந்தில் வெற்றி பெறாமல் இருந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காரணத்தினால் ரியல் மாட்ரிட் 74 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது. பார்சிலோனா அணி 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
பார்சிலோனாவுக்கு மீதம் 6 போட்டிகளும் ரியல் மாட்ரிட் அணிக்கு மீதம் 5 போட்டிகள் மட்டுமே இருப்பது கோப்பை வெல்லும் வாய்ப்பை கிட்டதட்ட உறுதியானதுபோல் இருக்கிறது.
Summary
Betis equalizes in stoppage time and deals blow to Real Madrid slim title hopes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலியன் அல்வாரெஸ் விற்பனைக்கு அல்ல..! அத்லெடிகோ மாட்ரிட் அறிவிப்பு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் கால்பதிக்கும் ரியல் பெட்டிஸ்!
சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா!

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

