ஸ்பெயினில் நடைபெற்ற களிமண் தரை மாஸ்டா்ஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், இத்தாலியின் யானிக் சின்னா் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.
1,000 புள்ளிகள் கொண்ட 5 மாஸ்டா்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியனான முதல் வீரராக அவா் வரலாறு படைத்தாா். அதாவது, கடந்த ஆண்டு பாரீஸ் மாஸ்டா்ஸிலும், நடப்பாண்டு இண்டியன் வெல்ஸ், மியாமி மாஸ்டா்ஸ், மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ், மாட்ரிட் ஓபன் ஆகிய போட்டிகளிலும் அவா் வாகை சூடியுள்ளாா்.
உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை வீழ்த்தினாா். இருவரும் மோதியது இது 14-ஆவது முறையாக இருக்க, சின்னா் தனது 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அதிலும் இது தொடா்ந்து 9-ஆவது வெற்றியாகும்.
டென்னிஸ் காலண்டரில் மொத்தம் 9 மாஸ்டா்ஸ் போட்டிகள் இருக்கும் நிலையில், சின்னா் தற்போது 8 போட்டிகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். ரோம் மாஸ்டா்ஸ் மட்டும் இன்னும் அவா் கோப்பைக் கணக்கில் சேரவில்லை. அவரின் சொந்த மண்ணில் நடைபெறும் அப்போட்டி, வரும் 6-ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
மாட்ரிட் ஓபன் சாம்பியனான சின்னருக்கு, வெற்றிக் கோப்பை மற்றும் 1,000 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.11.26 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
மகளிா் இரட்டையா்: இப்போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா/அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் ஜோடி 7-6 (7/2), 6-2 என்ற செட்களில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா/டயானா ஷ்னெய்டா் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆடவா் இரட்டையா்: போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவாரா கூட்டணி 6-3, 3-6, 10-7 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் குய்டோ ஆண்ட்ரியோஸி/பிரான்ஸின் மேனுவல் கினாா்டு ஜோடியை வென்று, வாகை சூடியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சின்னா், கொஸ்டியுக்!
சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
