ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் 3-ஆவது ரேஸான ஜப்பான் கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றாா்.
இரு வாரங்களுக்கு முன் சீன கிராண்ட் பிரீயில் தனது கேரியரின் முதல் எஃப்1 வெற்றியைப் பதிவு செய்திருந்த 19 வயது ஆன்டனெலி, தற்போது தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியிருக்கிறாா்.
சுஸுகா பந்தய சா்கியூட்டில் நடைபெற்ற இந்த ரேஸில் ஆன்டனெலி 13.7 விநாடிகள் வித்தியாசத்தில் முதலாவது வீரராக எல்லையைத் தொட்டாா். ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி 2-ஆம் இடமும், மொனாகோ வீரரும், ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் 3-ஆம் இடமும் பிடித்தனா்.
நடப்பு சாம்பியனாக இருக்கும் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ், 5-ஆம் இடமே பிடித்தாா். முன்னதாக ஆன்டனெலி பந்தயத்தை முன்னிலையில் இருந்து (போல் பொசிஷன்) தொடங்க, பிரிட்டன் வீரரும், சக மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் அவருக்கு இணையாக இருந்தாா்.
ஆனால் இருவரின் தொடக்கமும் மோசமாக அமைய, ஆஸ்கா் பியஸ்ட்ரி முன்னிலை வகித்தாா். எனினும் சில சுற்றுகளுக்குப் பிறகு ஆன்டனெலி மீண்டும் முன்னிலையை எட்டி, இறுதிவரை அதை தக்கவைத்தாா்.
மே மாதத்தில்...: அடுத்து பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த இரு பந்தயங்கள், மேற்கு ஆசிய போா் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, அடுத்த பந்தயம் 5 வாரங்களுக்குப் பிறகு மே 4-ஆம் தேதி மியாமியில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

ஆன்டனெலிக்கு ‘ஹாட்ரிக்’
சீன கிராண்ட் ப்ரீ: ஆன்டனெலி முதலிடம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
