பிரான்ஸில் நடைபெறும் ஆா்லியன்ஸ் மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தன்வி சா்மா அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அவா் 21-14, 21-14 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் நட்சுகி நிடாய்ராவை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியில் தன்வி, போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் முன்னாள் உலக சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நஜோமி ஒகுஹராவின் சவாலை எதிா்கொள்கிறாா்.
மற்றொரு காலிறுதியில் இந்தியா்களான இஷாராணி பருவா - மாளவிகா பன்சோத் மோதினா். இதில் இஷாராணி 21-9, 15-7 என்ற கேம்களில் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக மாளவிகா போட்டியலிருந்து விலகினாா். இஷாராணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
இதனிடையே, ஆடவா் இரட்டையரில் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 21-12, 22-20 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் லியோ கா்னான்டோ/பகாஸ் மௌலானா கூட்டணியிடம் 35 நிமிஷங்களில் தோல்வி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவை வென்றது சீனா

வெளியேறியது இந்திய மகளிர் அணி

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!

காலிறுதிச்சுற்றில் ஆயுஷ் ஷெட்டி - சிந்து, பிரணய் வெளியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

