பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் தனது ஓய்வு முடிவை இந்தக் கிளப்புடன் முடித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக்கில் முதல்கட்ட ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நியூ கேஸில் உடன் 1-1 என சமநிலையில் இருக்கிறது. நாளை (மார்ச் 19) நள்ளிரவு இரண்டாம் கட்ட ரவுண்ட் ஆஃப் 16 போட்டி நடைபெறுகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஹன்சி ஃபிளிக் (61 வயது) பார்சிலோனா அணிக்கு 2024 முதல் பயிற்சியாளராக இருக்கிறார். இதற்கு முன்பாக பயர்ன் மியூனிக் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில் சாம்பியன்ஸ் லீக், கிளப் உலகக் கோப்பை உள்பட 8 மிகப்பெரிய கோப்பைகள் வெல்லப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா அணி லா லிகா, ஸ்பானிஷ், சூப்பர் ஸ்பானிஷ் கோப்பைகளை வென்று அசத்தியது.
சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதியில் பார்சிலோனா அணி தோல்வியுற்றது. இந்தமுறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த பார்சிலோனாவுக்கான நிர்வாகி தேர்தலில் ஜான் லபோர்டா வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹன்சி ஃபிளிக்கின் பயிற்சியாளர் பதவிக்காலம் 2028 வரை நீட்டிக்க அந்த அணியின் நிர்வாகி ஜான் லபோர்டா திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஹன்சி ஃபிளிக் பேசியதாவது:
இங்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும். ஆனால், நானும் எனது குடும்பத்துடன் பேச வேண்டுமென நினைக்கிறேன். அதற்கான நேரம் இருக்கிறது.
பார்சிலோனாவில் பணியாற்ற பிடித்திருக்கிறது. ஆதரவும் சிறப்பாக இருக்கிறது. கால்பந்தில், நான் எப்போதுமே உயர்வானதை எதிர்பார்க்கிறேன். வெளியேற விரும்பவில்லை. பார்சிலோனாதான் எனது கடைசி கிளப்பாக இருக்கும் என்றார்.
Summary
Hansi Flick says Barcelona will be his last coaching job.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


