கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய நாடாக குராசோ தீவு தேர்வாகி சாதனை படைத்திருந்தது. தற்போது, இந்த அணி ஈக்குவாடர் உடனான போட்டியில் சமனில் முடித்து தனது முதல் உலகக் கோப்பையில் 1 புள்ளியைப் பெற்று அசத்தியிள்ளது.
அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி திடலில் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள குராசோ அணியும் ஈக்குவாடர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் குராசோ தீவின் கோல் கீப்பர் எலாய் ரூம் (37 வயது) 15 கோல்களைத் தடுத்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பந்தைத் தடுக்கும் எலாய் ரூம். - ஏபி
ஈக்குவாடர் அணி இந்தப் போட்டியில் 65 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்து, 27 ஷாட்டுகளை அடித்தது. அதில் 15 முறை இலக்கை நோக்கி அடித்தது. அத்தனையும் எதிரணியின் கோல் கீப்பர் தடுத்து அசத்தினார்.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே இது இரண்டாவது அதிகபட்சமாக தடுத்த கோல்கள் ஆகும். முன்னதாக, அமெரிக்காவின் டிம் ஹோவர்ட் 2014 உலகக் கோப்பையில் 16 கோல்களை தடுத்திருந்தார்.
90 நிமிஷ வழக்கமான நேரத்தில் டிம் ஹோவர்ட் 12 கோல்கள் மட்டுமே தடுத்திருந்தார், ஸ்டாப்பேஜ் நேரத்தில்தான் கூடுதலாக 4 கோல்கள் தடுத்தார். ஆனால், எலாய் ரூம் 90 நிமிஷத்திலேயே 15 கோல்களை தடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 7 கோல்களை தடுத்த கேப் வெர்டே கோல்கீப்பர் கவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Eloy Room makes history with 15 saves against Ecuador and curacao gets first point in World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!

உலகக் கோப்பையில் மெஸ்ஸி நிகழ்த்திய 8 சாதனைகள்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


