கால்பந்து வீரர்களின் பெயரை தவறாக உச்சரித்து வைரலான தமிழ் ஆடியோவை பயன்படுத்தி ஜுவென்டஸ் அணி ரீல்ஸ் பதிவிட்ட விடியோ வைரல் ஆகியுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக 48 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டி ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து புகழ்பெறாவிட்டாலும் அதற்கென தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேரளத்திலும் பாண்டிச்சேரியில் இதற்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த செல்வி (செல்வி அம்மா) என்ற கணவனைப் பிரிந்த பெண் ஒருவர் கால்பந்து வீரர்களுக்கான ஜெர்ஸியை விற்று வருகிறார். அவருக்கு அது கால்பந்து என்பதும் தெரியவில்லை, அதில் வரும் நட்சத்திர வீரர்களின் பெயரும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியை அர்ஜென்டுனா லெஸ்ஸி, ஸ்பெயின் நட்சத்திர வீரர் லாமின் யமாலை லஷ்மி அம்மாள், போர்ச்சுகல் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நரோடா எனவும் பெக்கமை பிகாம் எனக் கூறியதும் வைரலானது.
குறிப்பாக லாமின் யமாலை லஷ்மி அம்மாள் என்றதுதான் உலகப்புகழ்ப்பெற்றது. இந்த ரீல்ஸ் பல லட்சங்களைத் தாண்டியது.
இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான ஜுவென்டஸ் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வைரலான பாட்டியின் ஆடியோவைப் பயன்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டுள்ளது. இது தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, வாரணாசி படத்தின் பாடலை வெளியிட்டிருந்தது. ரொனால்டோ இந்த அணியில் விளையாடியிருக்கிறார். சௌதி அரேபியாவில் அல்-நாசர் எனும் கிளப்பில் விளையாடுகிறார்.
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோவின் ஆட்டம் மோசமாக இருந்தது பலரையும் விமர்சிக்க வைத்தது.
Summary
lakshmi ammal aka lamine yamal viral audio used by Football club Juventus, viral video on instagram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!

அமெரிக்காவில் அனுமதி மறுப்பு... நாடு திரும்பிய உலகக் கோப்பை நடுவருக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

