கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகலின் வெற்றிக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ அணி 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காதது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது) தனது ஆறாவது உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் போட்டியை மறக்கும்படியான செயல்பாட்டை வழங்கியது அவரது ரசிகர்களிடமுமே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியின் 6ஆவது நிமிஷத்திலேயே போர்ச்சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்தார். பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45'+5') காங்கோவின் யோவான் விஸ்ஸா தனது தலையினால் கோல் அற்புதமான கோல் அடித்தார்.
முதல் பாதியில் 1-1 என இருந்த நிலையில், இரண்டாம் பாதி முழுவதும் இதேமாதிரி தொடர்ந்தது. போர்ச்சுகல் அணி எவ்வளவோ முயன்றும் காங்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் அளித்தது.
இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல், அசிஸ்ட் கூட செய்யவில்லை. கோல் அடிக்க 68, 73ஆவது நிமிஷத்தில் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவறவிட்டது பலரிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்பாபே, மெஸ்ஸி, ஹாலண்ட் கோல்கள் அடிக்க ரொனால்டோ அடிக்காதது இணையத்தில் கிண்டலாக மாறியுள்ளது. காங்கோ தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் கோல் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
Summary
Portugal great Ronaldo fails to score in surprising 1-1 draw against Congo at World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுநலமாக சிந்திக்க வேண்டும்; சுயநலமாக அல்ல..! ரொனால்டோவை விமர்சித்த முன்னாள் வீரர்!

உலகக் கோப்பையில் மெஸ்ஸி நிகழ்த்திய 8 சாதனைகள்!

3 வரலாற்றுச் சாதனைகளுடன் சொந்த மண்ணில் அபார வெற்றியைப் பெற்ற அமெரிக்கா!

எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


