கத்தார் - சுட்சர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் குரூப் - பி அணிகளுக்கான ஆட்டத்தில் கத்தார் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கி 13வது நிமிடம் முதல் சுவிஸ் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சுவிஸ் அணியின் ரெமோ ஃப்ரூலரிடம் கத்தார் கோல்கீப்பர் மமூத் அபுனாடா செய்த ஃபவுலால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரீல் எம்போலோ கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்திய சுவிஸ் முதல் கோலுக்குப் பின்னர் மேலும் முன்னேற முடியாமல் தவித்தது. சுவிஸ் அணியின் டான் என்டோயே மற்றும் ரூபன் வர்காஸ் ஆகியோர் கோல் அடிக்கும் முக்கிய வாய்ப்புகளைத் தவறவிட்ட நிலையில், மைக்கேல் ஏபிஷரின் அடித்த ஷாட் கோல் கோட்டில் தடுக்கப்பட்டது.
கத்தார் அணி அணையாத வெப்பத்திலும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திச் சென்றது. அவர்களின் விடாமுயற்சிக்கு இறுதி நிமிடங்களில் பலன் கிடைத்தது. ஹோமம் அல் அமின் அடித்த கிராஸ் பந்தை கேப்டன் பௌலேம் கூக்கி தலையால் அடித்து கோலாக்கினார்.
இதனால், கடைசி நிமிடங்களில் ஆட்டம் சமனாகி டிராவில் முடிந்தது. மேலும், இத்தொடரில் கத்தார் அணி முதல் புள்ளியைப் பெற்றது.
Summary
The Qatar-Switzerland match ended in a draw!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

கடைசி நேர பரபரப்பு... டிராவில் முடிந்த கனடா - போஸ்னியா ஆட்டம்!

கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா!
பிஃபா உலகக்கோப்பை! கத்தார் அணியில் விளையாடும் 19 வயதான கேரள வம்சாவளி வீரர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


