ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா மற்றும் போஸ்னியா - ஹெர்ஸெகோவினா நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி டொராண்டோ மைதானத்தில் இன்று நடைபெற்றது.
குரூப் - பி அணிகளுக்குள் நடைபெற்ற முதல் போட்டியான இது கனடாவுக்கு முதல் புள்ளியைப் பெற்றுத்தந்த போட்டியாகவும் அமைந்தது.
ஆட்டம் தொடங்கியது முதல் நல்ல முறையில் ஆடிய போஸ்னியா, ஒவ்வொரு மூலையிலும் கனடாவுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டது. போஸ்னிய வீரர் அமர் மீமிக் அடித்த கோல், கம்பத்திற்கு மேலே சென்ற பின்னர் சீர் கோலாசினாக் கார்னரில் தட்டிய பந்தை தலையால் முட்டி ஜோவோ லூகிச் கோலாக்கினார். இதனால், கனடா ரசிகர்கள் அமைதியாகினர்.
ஆனால், கனடா அணி பின்வாங்க மறுத்த நிலையில் ஜோனதன் டேவிட் அடிக்க முயன்ற கோல் நிக்கோலா வாசில்ஜால் தடுக்கப்பட்டது. அதே நேரத்தில், டானி ஒலுவசாய் கோல் அடிக்கக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டார்.
இடைவேளைக்குப் பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய கனடா அணி மீண்டும் தனது கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டனர். மறுமுனையில், கனடா அணி கோல்கீப்பர் போஸ்னிய அணி வீரர்கள் மேலும் ஒரு புள்ளியை எடுப்பதைத் தடுத்து வந்தார்.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில், கனடா அணியின் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஸ்ச், மாற்று வீரராக லாரினைக் களமிறக்கினார்.
மைதானத்தினுள் களமிறங்கி 2 நிமிடங்களில் கோல் அடித்த லாரின், ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் ஆட்டத்தை முழுவதுமாக மாற்றினார்.
பயிற்சியாளரின் கடைசி நேர முடிவால் அணியின் தோல்வி தடுக்கப்பட்டு இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதன்மூலம், ஒரு புள்ளியைப் பெற்று குரூப் பி அணிகளுடனான அடுத்த ஆட்டங்களுக்கு இரு அணிகளும் தயாராகிவிட்டனர்.
அடுத்ததாக, கனடா - கத்தார் இடையேயான ஆட்டம் ஜூன் 18 அன்றும், போஸ்னியா - சுவிட்சர்லாந்து இடையேயான ஆட்டம் ஜூன் 19 அன்றும் நடைபெறவுள்ளது.
Summary
About the match played between Canada and Bosnia and Herzegovina
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது!

கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகல தொடக்கம்...
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


