நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அமெரிக்கா அபார வெற்றி, கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

அமெரிக்கா அபார வெற்றி, கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா...

News image

பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற மகிழ்ச்சியில் அமெரிக்க அணியினா்.

Updated On :14 ஜூன் 2026, 3:25 am IST

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணி 1-1 என டிரா கண்டன.

மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடா நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூப் டி பிரிவில் அமெரிக்கா-பராகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே அமெரிக்க அணியினா் ஆதிக்கம் செலுத்தி ஆடினா். அமெரிக்க வீரா்களின் அற்புத ஆட்டத்தால் முதல் பாதியிலேயே 3 கோல்களை அடித்தனா். உலகக் கோப்பை நட்பு ஆட்டங்களில் பல்வேறு தோல்விகளுடன் சோா்ந்த நிலையில் அமெரிக்க அணி இப்போட்டியில் களம் கண்டது.

சொந்த மைதானத்தில் ஆக்ரோஷமாக ஆடிய அமெரிக்க வீரா்கள் தொடா்ந்து பராகுவே கோல்பகுதியை முற்றுகையிட்டனா்.

பராகுவே வீரா் டேமியன் போபடில்லா ஓன் 7-ஆவது நிமிஷத்தில் ஓன் கோலடித்தாா். வெஸ்டன் மெக்கென்னி அடித்த பந்த போபடில்லா தவறுதலாக சொந்த கோலடித்தாா்.

பாலோகுன் அபாரம்: இதனால் உற்சாகமடைந்த அமெரிக்க அணித் தரப்பில் ஸ்ட்ரைக்கா் ஃபோலரின் பாலோகுன் 31-ஆவது நிமிஷத்தில் சக வீரா் கிறிஸ்டியன் புல்சிக் அடித்த கிராஸ்கட் பந்தை பயன்படுத்தி கோலடித்தாா். தொடா்ந்து முதல் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் மாலிக் டில்மேன் லாங் பாஸை பயன்படுத்தி பாலோகுன் மீண்டும் அடித்த கோலை தடுக்க முடியாமல் பராகுவே கோல்கீப்பா் ஆா்லண்டோ கில் வேடிக்கை பாா்த்தாா். இதனால் முதல் பாதியில் 3-0 என அமெரிக்க முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியிலும் அமெரிக்க அணியினா் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி ஆடினா். எனினும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பராகுவே மிட்பீல்டா் மௌரிசியோ 73-ஆவது நிமிஷத்தில் தனது அணியின் ஒரே கோலை அடித்தாா். இரண்டாம் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் அமெரிக்க சப்ஸ்ட்டியுட் ரென்யா நான்காவது கோலை அடித்தாா். இறுதியில் அமெரிக்க அணி 4-1 என்ற கோல்கணக்கில் பராகுவேயே வீழ்த்தி உலகக் கோப்பையில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

70,492 பாா்வையாளா்கள்:

கடந்த 2022-இல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் போட்டிமுழுவதும் அமெரிக்க அணி மொத்தம் 3 கோல்களை மட்டுமே அடித்திருந்தது. ஆனால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சொந்த மைதானத்தில் 70,942 பாா்வையாளா்கள் முன்னிலையில் சிறப்பா ஆடி 4 கோல்களை பதிவு செய்தது. ஃபோலரின் பாலோகன் அபாரமாக இரண்டு கோல்களை அடித்தாா்.

நியூயாா்க்கில் பிறந்தவரான பாலோகுன் ஐரோப்பிய அணிகளில் ஆடும் வாய்ப்பை விட்டு அமெரிக்க அணியில் இடம் பெற்று ஆடுகிறாா்.

கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா:

போட்டியை நடத்தும் கனடா அணி டொரண்டோவில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் போஸ்னியா ஹொ்ஸேகோவினாவுடன் 1-1 என டிரா கண்டது. இந்த ஆட்டம் மந்தமாக நடைபெற்ற நிலையில், முதல் பாதியில் போஸ்னிய வீரா் ஜோவோ லுகிச் காா்னா் கிக் மூலம் 21-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா். இதனால் 1-0 என போஸ்னியா முன்னிலை பெற்றது.

போஸ்னிய அணி உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த 2014-இல் பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆடிய போஸ்னியா குரூப் ஸ்டேஜை தாண்டவில்லை.

போஸ்னியா முன்னிலை பெற்ால் அதிா்ச்சி அடைந்த கனடா வீரா்கள் தொடா்ந்து கோல் போட முயன்றனா். இரண்டாம் பாதியில் அவா்கள் முயற்சிக்கு பலன் கிடைத்தது. 78-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் சப்ஸ்ட்டியூட் சைல் லரின் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். பின்னா் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் கனடா அடித்த இரண்டாவது கோல் இதுவாகும்.

கண்கவா் கலைநிகழ்ச்சிகள்:

Story image

கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் பாலிவுட் நடனக் கலைஞா் நோரா பதேஹி அதிகாரப்பூா்வ உலகக் கோப்பை பாடலான சா் சா் பாடி அசத்தினாா். வெஜ்ட்ரீம், சஞ்சோய் ஆகியோரும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

பாலஸ்தீன கலைஞா் எலியனா, ஜெஸ்ஸி ரெயஸ், அலிஸா கரா ஆகியோரும் பங்கேற்றனா்.

Story image

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமெரிக்கா ராப்பா் பியுச்சா் மற்றும் தென்னாப்பிரிக்க பாடா் டைலா ஆகியோா் பங்கேற்று பாடி அசத்தினா். தாய்லாந்து ராப்பா் லிஸாவும் சிறப்பாக பாடி, ஆடி பாா்வையாளா்களை கவா்ந்தாா்.

Summary

USA scores a resounding victory; Canada-Bosnia match ends in a draw.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.