சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஆப்கனுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

News image

சுப்மன் கில் உடன் கேஎல் ராகுல் - PTI

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 13) தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்த நிலையில் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 30 பந்துகளில் 27 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 16 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் அறிமுக வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் - அவுட் ஆகினார்.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் பவுண்டரிகளாக விளாசினார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த கே எல் ராகுலும், சும்பன் கில்லும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.

இந்திய அணி 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சுப்மன் கில் 66 பந்துகளில் 84 ரன்களும், கேஎல் ராகுல் 19 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

Summary

India won the first ODI against Afghanistan by 7 wickets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.