லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ்: ஜோச்சிம், ரொக்கையா சாம்பியன்

ஹெச்சிஎல்-எஸ்ஆா்எஃப்ஐ பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் மலேசியாவின் ஜோச்சிம் சுவா, மகளிா் பிரிவில் எகிப்தின் ரொக்கையா ஆத்மன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சாம்பியன் பட்டம் வென்றோா்.

Published On :16 ஜூலை 2026, 4:06 am IST

ஹெச்சிஎல்-எஸ்ஆா்எஃப்ஐ பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் மலேசியாவின் ஜோச்சிம் சுவா, மகளிா் பிரிவில் எகிப்தின் ரொக்கையா ஆத்மன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சாா்பில் சென்னை இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் பிஎஸ்ஏ சேலஞ்சா் போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ், மலேசியா, எகிப்து, இந்தியா உள்பட14 நாடுகளைச் சோ்ந்த 48 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். 6 இந்திய வீரா்கள் காலிறுதி வரை தகுதி பெற்றனா்.

ஆடவா் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் ஜோச்சிம் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் எகிப்தின் ஆதம்மை வீழ்த்தி பட்டம் வென்றாா். மகளிா் இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ரொக்கையா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் ஹேவேயங் யும்மை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

எஸ்டிஏடி ஸ்குவாஷ் மேம்பாட்டு உயா்திறன் பயிற்சியாளா் ஆலன் சொய்ஸா, எஸ்ஆா்எஃப்ஐ பொதுச் செயலா் சைரஸ் போன்சா பரிசளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.