லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குயின்டின் ஹேலிஸ் சாம்பியன்

கிட்ஸ்புஹெல் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் குயின்டின் ஹேலிஸ் சாபியன் பட்டம் வென்றாா்.

குயின்டன் ஹேலீஸ்

Published On :26 ஜூலை 2026, 2:28 am IST

கிட்ஸ்புஹெல் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் குயின்டின் ஹேலிஸ் சாபியன் பட்டம் வென்றாா்.

கிட்ஸ்புஹெல் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் குயின்டின் ஹேலிஸ்-கஜகஸ்தானின் அலெக்சாண்டா் பப்ளிக் மோதினா்.

இதில் குயின்டின் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் பப்ளிக்கை வீழ்த்தி முதல் ஏடிபி பட்டத்தை வென்றாா்.

ஹேலிஸ் 4 ஏஸ்களுடன் முதல் செட்டை தொடங்கினாா். 94 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹேலிஸ் 17 ஏஸ்களை போட்டு, பப்ளிக்கை பிரேக் பாயிண்ட் கூட எடுக்கவிடவில்லை.

இரண்டாம் செட்டில் ஹேலிஸ் 4, 8-ஆவது கேம்களில் தவறு புரிந்தாா். பப்ளிக் 6-5 என டை பிரேக்கா் நிலை வந்தபோது, ட்ராப்ஷாட்டை தவற விட்டது பாதகமாக அமைந்தது.

இந்த வெற்றியால் 83-ஆவது நிலையில் உள்ள ஹேலிஸ் ஏடிபி வரிசையில் 50-ஆம் இடத்துக்கு முன்னேறுவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.