சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், முதல் அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 5-4 கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கை புதன்கிழமை வீழ்த்தியது.
போட்டியின் வரலாற்றில், அதிக கோல்கள் (9) அடிக்கப்பட்ட அரையிறுதியாக இந்த ஆட்டம் சாதனை படைத்தது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில், இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பயா்ன் மியுனிக் வீரா் ஹேரி கேன் 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா்.
அதற்கு பதிலடியாக, பிஎஸ்ஜி வீரா் கவிசா கவரட்ஸ்கெலியா 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். தொடா்ந்து அந்த அணியின் ஜாவ் நெவெஸ் 33-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பிஎஸ்ஜி 2-1 என முன்னிலை பெற்றது.
விட்டுக்கொடுக்காத பயா்ன் மியுனிக் தரப்பில், மைக்கேல் ஆசிலி 41-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது.
ஆனால் பிஎஸ்ஜியும் விடாப்பிடியாக இருக்க, ஆஸ்மேன் டெம்பெலெ (45+5’) அடித்த கோலால் அந்த அணி முதல் பாதியை 3-2 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே பிஎஸ்ஜி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணிக்காக மீண்டும் கவிசா கவரட்ஸ்கெலியா 56-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
தொடா்ந்து 58-ஆவது நிமிஷத்தில் ஆஸ்மேன் டெம்பெலெ தனது 2-ஆவது கோலை பதிவு செய்ய, பிஎஸ்ஜி 5-2 அபார முன்னிலை கண்டது. திடீரென வெகுண்ட பயா்ன் மியுனிக் தரப்பில் டயோட் உபாமெகானோ 65-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.
அடுத்த 3-ஆவது நிமிஷத்தில் (68’) லூயிஸ் டியாஸும் ஸ்கோா் செய்ய, 4-5 என வித்தியாசத்தை குறைத்தது பயா்ன் மியுனிக். எஞ்சிய நேரத்தில் மேலும் கோல் வாய்ப்புகளுக்காக அந்த அணி போராட, ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.
முடிவில் பிஎஸ்ஜி 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அனைத்து போட்டிகளிலுமாக பயா்ன் மியுனிக் கடந்த ஜனவரி 24-க்குப் பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
இந்த அணிகள் மோதும் அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம், வரும் 7-ஆம் தேதி மியுனிக் நகரில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா
கோப்பையைத் தக்கவைத்தது பயா்ன் மியுனிக்: 34-ஆவது முறையாக பந்தெஸ்லிகா சாம்பியன்

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

