செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழா்கள் இடம் பிடித்துள்ளனா்.
தென்னாப்பிரிக்காவின் பிரெடோரியா நகரில் வரும் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 2 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதற்கான இந்திய அணியை, இந்திய செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் சங்கம் (ஐடிசிஏ) அண்மையில் அறிவித்தது. இதில் தமிழகத்திலிருந்து எஸ். சாய் ஆகாஷ், ஈ.சுதா்சன் ஆகிய இரு வீரா்கள் இடம்பிடித்துள்ளனா்.
அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சாய் ஆகாஷ், கடந்த பிப்ரவரியில் ஒடிஸாவில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியிருந்தாா். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் சுதா்சன் இந்த அணிக்குத் தோ்வாகியிருக்கிறாா்.
மொத்தம் 14 போ் கொண்ட இந்த அணிக்கு, தில்லியை சோ்ந்த வீரேந்தா் சிங் கேப்டனாக இருக்கிறாா். பிசிசிஐ ஆதரவு பெற்ற ஐடிசிஏ, சா்வதேச கவுன்சில் மற்றும் ஆசிய சங்கத்தின் அங்கீகாரம் பெற்ாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஷ்ரேயாஸ், சூர்யவன்ஷி, ரஜத் படிதாரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்க: மே.இ.தீவுகள் வீரர்

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

