பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் நியூஸிலாந்துக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என முழுமையாக வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
இதில் முதல் ஒற்றையா் பிரிவு மோதலில் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற செட்களில், அனு ஜின் கான்டோரை 37 நிமிஷங்களில் தோற்கடித்தாா். 2-ஆவது ஒற்றையா் மோதலில் சஹஜா யமலபள்ளியும் 6-0, 6-0 என ஜா்கல் அல்டன்சா்னயை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 42 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவு மோதலில், வைஷ்ணவி அத்கா்/ருதுஜா போசலே இணை 6-1, 6-0 என, கோன்கோா்ஸுல் அல்டாா்கிஷிக்/ஜா்கல் அல்டரன்சா்னய் கூட்டணியை சாய்த்தது.
இதுவரை 4 டைகளில் விளையாடியிருக்கும் இந்திய மகளிா், நியூஸிலாந்து, மங்கோலியாவுக்கு எதிராக முழுமையாக வென்றுள்ள நிலையில், தாய்லாந்து, இந்தோனேசியாவிடம் தோற்றுள்ளனா்.
கடைசி டையில் தென் கொரியாவுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா. ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற, கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குரூப் 2-க்கு தரமிறக்கப்படும்.
இந்தியா இந்த இரண்டுக்கும் இடையே நின்று, குரூப் 1-இல் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
பயிற்சியாளர் மட்டுமல்ல...

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

