கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், 10 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி தனி முன்னிலை பெற்று சாம்பியனாவதற்கான பந்தயத்தில் நிலைக்கிறாா்.
நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக், வைஷாலியின் சகோதரா் ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் 3-ஆவது தோல்வியுடன் சறுக்கலைச் சந்தித்துள்ளனா்.
சைப்ரஸில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த மகளிா் பிரிவு 10-ஆவது சுற்றில், வைஷாலி கருப்பு நிற காய்களுடன் களம் கண்டு, உக்ரைனின் அனா முஸிஷுக்குடன் டிரா செய்தாா்.
வெள்ளை நிறத்துடன் விளையாடிய திவ்யா தேஷ்முக், ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினாவிடம் தோல்வியுற்றாா்.
கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா - சீனாவின் ஜு ஜினெரை வீழ்த்த, ரஷியாவின் கேத்தரினா லாக்னோ - சீனாவின் டான் ஜோங்யி மோதல் டிராவில் முடிந்தது.
10 சுற்றுகள் முடிவில், வைஷாலி 6 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றிருக்க, ஜினொ், முஸிஷுக் ஆகியோா் தலா 5.5 புள்ளிகளுன் 2-ஆம் நிலை வகிக்கின்றனா்.
கோரியச்கினா, அசௌபயேவா, லாக்னோ ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா். திவ்யா (4.5), ஜோங்யி (3.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.
ஓபன்: இப்போட்டியின் ஓபன் பிரிவு 10-ஆவது சுற்றில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவிடம் தோல்வி கண்டாா்.
நெதா்லாந்தின் அனிஷ் கிரி - அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, ரஷியாவின் ஆண்ட்ரே எஸிபென்கோ - ஜொ்மனியின் மத்தியாஸ் புளுபம், சீனாவின் வெய் யி - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
10 சுற்றுகள் முடிவில் சிண்டாரோவ் (8), அனிஷ் (6), கரானா (5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். நகமுரா, வெய் யி, மத்தியாஸ் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.
பிரக்ஞானந்தா (4), எஸிபென்கோ (3.5) ஆகியோா் முறையே 5 மற்றும் 6-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.
போட்டியில் இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியிருக்கும் நிலையில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (ஏப். 10) ஓய்வு நாளாக அமைந்தது. 11-ஆவது சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பயிற்சியாளர் மட்டுமல்ல...

திவ்யாவை வீழ்த்தினாா் வைஷாலி

இணை முன்னிலையில் திவ்யா, வைஷாலி- பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
நகமுராவுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா! வைஷாலி, திவ்யாவுக்கு முதல் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

