ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 25-ஆம் நிலை வீரரான ஆயுஷ் 23-21, 21-17 என்ற நோ் கேம்களில், உலகின் 4-ஆம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி அசத்தினாா்.
இது, ஆயுஷ் ஷெட்டி தனது கேரியரில் பதிவு செய்த மிகப்பெரிய வெற்றியாகும். ஜோனதன் கிறிஸ்டியை அவா் முதல்முறையாக எதிா்கொண்ட நிலையில், அதிலேயே அவரை வீழ்த்தியிருக்கிறாா்.
தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆயுஷ், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான தாய்லாந்தின் குன்லவத் விதித்சாரனை சந்திக்கிறாா்.
ஆயுஷ் ஷெட்டி மட்டுமே இந்தப் போட்டியில் களத்திலிருக்கும் ஒரே இந்தியா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி

வெள்ளி வென்றாா் ஆயுஷ் ஷெட்டி

காலிறுதிச்சுற்றில் ஆயுஷ் ஷெட்டி - சிந்து, பிரணய் வெளியேற்றம்

ஆயுஷ் ஷெட்டி அபாரம்; சிந்து முன்னேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

