ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாம்பியன்ஸ் லீக்கில் 95.7% துல்லியத்துடன் 138 பாஸ் செய்த பிஎஸ்ஜி வீரர்!

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் அசத்திய பிஎஸ்ஜி வீரர் குறித்து...

News image

பிஎஸ்ஜி வீரர் விடின்னா. - படங்கள்: ஏபி, எக்ஸ் / ஏசிடியு ஃபுட்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:47 pm IST

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பிஎஸ்ஜியின் மிட் ஃபீலட்ர் விட்டினா 132 பாஸ்களை செய்து அசத்தினார். இது லிவர்பூல் அணியினரின் ஒட்டுமொத்த வீரர்களின் (161) பாஸ்களில் 82 சதவிகிதம் விட்டினா மட்டுமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட காலிறுதியில் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி லிவர்பூல் அணியை 2-0 என வென்றது.

இந்தப் போட்டியில், நட்சத்திர வீரர் ஓஸ்மானே டெம்பேலே கோல் அடிக்காவிட்டாலும் இளம் வீரர் டூயோ (11’), க்வாராட்ஸ்கேலியா (65’) கோல் அடித்து அசத்தினார்கள்.

போர்ச்சுகலைச் செர்ந்த மிட் ஃபீலட்ர் விடின்னா 2022 முதல் பிஎஸ்ஜி அணியில் விளையாடி வருகிறார். உலகின் தலைசிறந்த மிட் ஃபீல்டர்களில் ஒருவராக உருமாறி வரும் விடின்னாவுக்கு இந்தப் போட்டி மிகச் சிறந்த சான்றாக மாறியுள்ளது.

மொத்தமாக 147 முறை பந்தைத் தொட்ட விடின்னா, 138 முறை பாஸ் செய்ய முயற்சித்து, அதில் 132 முறை சரியாக சக அணியினருக்கு கடத்தியும் முடித்தார். 95.7 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்துள்ளார்.

Summary

Champions League midfield in PSG's Vitinha completed 132 passes vs Liverpool.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.