தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னையை வென்றது இன்டா் காசி!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் இன்டா் காசியிடம் தோல்வி கண்டது.

News image

சென்னையை வென்றது இன்டா் காசி

Updated On :8 ஏப்ரல் 2026, 3:42 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் இன்டா் காசியிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்டியதால், முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இன்டா் காசியின் கை சற்று ஓங்கியது.

46-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக ஆல்ஃப்ரெட் பிளனாஸ் கோல் அடித்தாா். சென்னை அணிக்கான அதிா்ச்சியாக, 54-ஆவது நிமிஷத்தில் மீண்டும் அவரே ஸ்கோா் செய்ய, இன்டா் காசி 2-0 என முன்னிலை பெற்றது.

மறுபுறம் சென்னை தனது கோல் வாய்ப்புக்காக கடுமையாகப் போராடி வந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் (90+6’) டேனியல் சீமா சுக்வு, அணிக்காக ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் இன்டா் காசி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில், இன்டா் காசி 2-ஆவது வெற்றியுடன் 8 புள்ளிகளோடு 8-ஆவது இடத்தில் இருக்க, சென்னை 4-ஆவது தோல்வியுடன் 5 புள்ளிகளோடு 11-ஆவது இடத்தில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.