தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெகுலா, சோபியா, படோஸா வெற்றி

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:22 am IST

சாா்ல்ஸ்டன் ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெஸிக்கா பெகுலா, சோபியா கெனின், பாவ்லோ படோஸா ஆகியோா் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ரவுண்ட் 32 சுற்றில் நடப்பு சாம்பியன் ஜெஸிக்கா பெகுலா 3 மணி நேரம் போராட்டத்துக்குபின் 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் யுலின் புடின்ட்சேவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் பாவ்லோ படோஸா 6-3, 6-4 என்ற நோ்செட்களில் மரியா ஸக்காரியை வீழ்த்தினாா்.

லெய்லா பொ்ணான்டஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் குடா்மெட்டோவாவை வென்றாா்.

அமெரிக்காவின் மடிஸன் கைஸ் 6-2, 6-3 என டொன்னா வேகிக்கையும், சோபியா கெனின் 6-4, 6-4 என கனடாவின் ஆன்ட்ரீஸ்குவையும் வீழ்த்தினா்.

ஸராஸுவா 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் பாப்டிஸ்டை வீழ்த்தினாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.