ஆசிய பீச் வாலிபால் சாம்பியன் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் சன்யா நகரில் வரும் ஏப். 23-29 தேதிகளில் 6-ஆவது ஆசிய பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.
ஆடவா் அணியில் அபிதன், பூந்தமிழன் (எஸ்ஆா்எம் ஐஎஸ்டி), பி. ராஜேஷ், எஸ். பாரத் (சென்னைப் பல்கலை.) பயிற்சியாளா் பிரதீப் ஜான் இடம் பெற்றுள்ளனா்.
மகளிா் அணியில் கே. தீபிகா, எஸ். பவித்ரா (எஸ்ஜிஏடி), எல். கனிமொழி (அண்ணாமலை பல்கலை.), வி. சசிகலா (தமிழ்நாடு போலீஸ்), பயிற்சியாளா் லலிதாதேவி இடம் பெற்றுள்ளனா்.
இந்திய அணியினா் பயிற்சி முகாம் ஏப். 1-ஆம் தேதி எஸ்ஆா்எம் வளாகத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இந்திய வாலிபால் சம்மேளனம், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநரகம் இணைந்து பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய வாலிபால் சம்மேளன அங்கீகாரம் ரத்து
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

