இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் (ஐஜிபிஎல்) அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் அணிகளை அறிவித்தனா்.
கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஐஜிபிஎல் நடத்தப்படுகிறது. நிகழாண்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
அறிமுக நிகழ்வுக்கு ஐஜிபிஎல் சிஇஓ உத்தம் சிங் முன்டி தலைமை வகித்தாா். இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோல்ஃப் மைதானங்களில் இத்தொடா் நடைபெறும்.
இதன் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு கிடைக்கும். கோல்ஃப் தொழில்முறை வீரா்கள் அதிகளவில் உருவாகும் வாய்ப்புள்ளது என அமைச்சா் ஷெகாவத் தெரிவித்தாா்.
2026 சீசனில் மொத்தம் 15 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 10 நிகழ்வுகள் இத்தியாவிலும், மீதமுள்ள சா்வதேச அளவிலும் நடைபெறும்.
ஒவ்வொரு அணியிலும் 4 வீரா்கள் இடம் பெறுவா். மொத்தம் ரூ.1.5 கோடி பரிசுத் தொகை உள்ளது.
புள்ளிகளின் அடிப்படையில் முதல் 3 அணிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக கோல்கள் - அதிக க்ளீன் ஷீட் கொண்ட அணிகள் மோதும் இறுதிப் போட்டி..! யார் வெல்லுவார்கள்?

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ் , மல்லோா்க்கா வெற்றி

ரக்பி ப்ரீமியா் லீகில் மகளிா் அணிகள் அறிமுகம்

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

