இந்தியன் ஃபுட்பால் லீக் (ஐஎஃப்எல்) தொடரில் ராஜஸ்தான் யுனைடெட் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் வித்யாதா் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் யுனைடெட்-சன்மாரி எஃப்சி அணிகள் மோதின.
இதில் சன்மாரி அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனா். எனினும் ராஜஸ்தான் அணியின் தற்காப்பை அசைக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் தான் கோல்போடும் வாய்ப்பு கிட்டியது. நவோபா மெய்டி 52-ஆவது நிமிஷத்திலும், அமடு சௌகனா 60-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.
சன்மாரி அணியால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என வென்ற ராஜஸ்தான் 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஹைதராபாதில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீ நிதி டெக்கான் எஃப்சி=ஷில்லாங் லஜோங் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இரு அணிகளின் கோல்கீப்பா்களும் அற்புதமாக கோல்வாய்ப்புகளை தகா்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ் , மல்லோா்க்கா வெற்றி

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

