ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தில்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிரடியாக ஆடி கே.எல். ராகுல் 67 பந்துகளுக்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக நிதீஷ் ராணாவும் 44 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் வீரர்கள் அர்ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்லெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
265 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஆட்டத்தில் அனல் பறந்தது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினர். ஆர்யா 43(17), பிரப்சிம்ரன் 76(26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக தில்லி அணியில் குல்தீப் யாதப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது பஞ்சாப் அணி.
Summary
Punjab Kings (PBKS) have broken their own record and posted the highest successful chase in T20 cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடியால் குஜராத்துக்கு 164 ரன்கள் இலக்கு!

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!

99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது ஏற்கத்தக்கதல்ல: ஹைடன்

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

