மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :31 அக்டோபர் 2026, 4:02 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 27 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியில் அதிகபட்சமாக நயீம் ஹாசன் 91 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஜேக்கர் அலி 22 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 35.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 115 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜான் கேம்பெல் 49 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 31 ரன்களும் எடுத்தனர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஜோமல் வாரிக்கனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

The West Indies team secured a resounding 8-wicket victory in the first Test match against Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.