மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சர்வதேச டி20-ல் 200 விக்கெட்டுகள்: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வரலாற்றுச் சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளதைப் பற்றி...

ஆப்கன் அணியினர்.

Published On :30 அக்டோபர் 2026, 5:36 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நடைபெற்று வருகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய 2-ஆவது டி20 போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 221/7 ரன்கள் எடுத்தன.

அதிரடியாக விளையாடிய அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 50 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சர்வதேச டி20-ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்!

  • ரஷித்கான் - 200 விக்கெட்டுகள் (120 போட்டிகள்)

  • ஆதில் ரஷீத் - 171 விக்கெட்டுகள் (153 போட்டிகள்)

  • எஷான் கான் - 165 விக்கெட்டுகள் (119 போட்டிகள்)

  • இஷ் சோதி - 165 விக்கெட்டுகள் (142 போட்டிகள்)

  • டிம் சௌதி - 164 விக்கெட்டுகள் (126 போட்டிகள்)

Summary

Rashid Khan has made a habit of rewriting records, and the Afghanistan leg-spinner has now reached a milestone no bowler in men's T20I cricket has managed before.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.