மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த முன்னாள் வீரர்களின் மகன்கள்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 30) அறிவித்துள்ளது.

படம் | பிசிசிஐ

Published On :30 அக்டோபர் 2026, 4:12 pm IST

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 30) அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

17 வயதாகும் அன்வே டிராவிட் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 100 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து அசத்தினார். இலங்கைக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியிலும் அவர் 67 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

19 வயதாகும் ஆர்யவீர் சேவாக் வினு மன்கத் டிராபியில் 143 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஆசிய கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி விவரம்

லக்‌ஷயா ராய்சந்தனி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே.வினீத், யஷ்பர்தன் சிங் சௌகான் (துணைக் கேப்டன்), குஷாக்ரா ஓஜா, அர்ஜூன் ராஜ்புட், மனால் சௌகான், அன்வே டிராவிட், ராஜத் பாஹல், வி.யஷ்வீர், ஆர்யன் சவ்சனி, மோஹித் உல்வா, காவ்யா படேல், ஷாவின் வினோத், இஷான் ஷூட்.

Summary

The BCCI announced the Indian squad for the Under-19 Asia Cup cricket tournament today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.