ஐசிசி தரவரிசை: டெஸ்ட்டில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மார்கோ யான்சென்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டு பிரிவுகளில் முதலிடம் வகிக்கும் மார்கோ யான்சென் குறித்து...

Marco Jansen poster

மார்கோ யான்சென் போஸ்டர் - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்

Published On :29 அக்டோபர் 2026, 12:25 pm IST

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் தென்னப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முந்தி ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை முந்தி பந்துவீச்சாளர் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என சமநிலையில் இருக்க, மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் 61 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் 85 ரன்கள் குவித்தார்.

தற்போது கேப்டவுனில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 52 ரன்கள், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மார்கோ யான்சென் தன்னுடைய உச்சபட்ச நிலையில் விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் வரிசையில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

26 வயதான மார்கோ யான்சென் 24 டெஸ்ட்டில் 822 ரன்கள், 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 2025 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

Summary

Peak form in marco Jansen, he is no.1 in test allrounder and bowler rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.