மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்: முகமது ஷமி

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி (கோப்புப் படம்)

Published On :20 அக்டோபர் 2026, 7:42 pm IST

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் (அக்டோபர் 22) நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது. எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும், அதில் இலக்கு என்பது இருக்க வேண்டும். அனைவருக்கும் இலக்கு இருக்கிறது. ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தற்போது விளையாடுகிறோம். எப்போதும் இலக்கு என்பது இருக்க வேண்டும்.

நான் இன்னும் என்னுடைய சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாததில் ஏமாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு முழுவதும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினேன். நான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினேன். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன். எதிர்வரும் தொடர்களுக்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலும், சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும் நான் ஒரே மாதிரியான பயிற்சியையே மேற்கொள்வேன் என்றார்.

36 வயதாகும் புவனேஷ்வர் குமார் அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Fast bowler Mohammed Shami has said that he is determined to play for the Indian team again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.