மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கப் பதக்கம் வென்ற பிறகு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதென்ன?

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

Indian team captain Shreyas Iyer

இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Published On :3 அக்டோபர் 2026, 4:32 pm IST

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்த நிலையில், தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். நாங்கள் ஜப்பான் வந்தடைந்ததிலிருந்து இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. எங்களால் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பயிற்சியே மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இந்திய அணி வீரர்கள் தங்களை தயார் செய்துகொண்ட விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. நாங்கள் எதையும் குறையாகவோ அல்லது காரணமாகவோ கூறவில்லை. சாம்பியன் அணிக்கான அடையாளம் அதுதான். இந்தியா ஒரு சாம்பியன் அணி என்பது எங்களது செயல்பாட்டிலிருந்து வெளிப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் விளையாடும்போது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும். இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியதை இன்று நாம் பார்த்தோம். அபிஷேக் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். இறுதிக்கட்டத்தில் திலக் வர்மா மிகவும் நன்றாக விளையாடினார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.

Summary

Indian team captain Shreyas Iyer has spoken about winning the gold medal at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.