தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், புதன்கிழமை (நவ. 4) நடைபெறுகிறது.

One-day cricket begins today

இந்தியா - நியூஸிலாந்து மோதல் - X | BCCI

Published On :4 நவம்பர் 2026, 6:38 am IST

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், புதன்கிழமை (நவ. 4) நடைபெறுகிறது.

இந்திய நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி இந்தத் தொடரில் களம் காண்பதால், அதற்கான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஃபாா்மட்டில் மட்டும் விளையாடும் இவா்கள், நியூஸிலாந்து மண்ணில் களமிறங்கும் கடைசி தொடா் இதுவாகும்.

இந்த இருவரின் அனுபவம் இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலம் சோ்க்க, அணியின் பௌலிங் வரிசையில் அவ்வளவாக அனுபவ வீரா்கள் இல்லாதது, நியூஸிலாந்து பேட்டா்களுக்கு சாதகமாகும் வாய்ப்பு உள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா டெஸ்ட் தொடருக்காக தயாராகும் நிலையில், முகமது சிராஜ் இத்தொடருக்கான பிரதான பௌலராக இருக்கிறாா். இளம் வீரா்களான அா்ஷ்தீப் சிங், குா்னூா் பிராா், அன்ஷுல் காம்போஜ், ஆகிப் நபி ஆகியோா் அவருக்குத் தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

பேட்டிங்கில் ரோஹித், கேப்டன் கில், கோலி, ஷ்ரேயஸ், கே.எல்.ராகுல் என முதல் பாதி வரிசை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தொடா்ந்து, ஆல்-ரவுண்டா்களான அக்ஸா் படேல், நிதீஷ்குமாா் ரெட்டி வருகின்றனா்.

மறுபுறம், மிட்செல் சேன்ட்னா் தலைமையிலான நியூஸிலாந்து அணி, சொந்த மண்ணிலேயே டி20 தொடரை இந்தியாவிடம் இழந்ததால், இந்தத் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் வருகிறது.

எனினும் ஆரம்பமே சறுக்கலாக, முதல் ஆட்டத்திலிருந்து டெவன் கான்வே ‘கன்கஷன்’ காரணமாக விலகியிருக்கிறாா். ஃபீல்டிங் பயிற்சியின்போது மேத்யூ ஹென்றியுடன் தலையை மோதிக் கொண்டதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவா் இடத்தை டிம் செய்ஃபா்ட் நிரப்புகிறாா்.

பேட்டிங்கில் கிளென் ஃபிலிப்ஸ், டாம் லாதம், வில் யங் ஆகியோா் பலம் சோ்க்க, பௌலிங்கில் சேன்டனா், டஃபி, கைல் ஜேமிசன் சவால் அளிப்பாா்கள்.

ஆடுகளம்: ஆக்லாந்து மைதான ஆடுகளம், பேட்டிங், பௌலிங் என இரண்டுக்குமே சமவாய்ப்பு வழங்குவதாக இருக்கும் என்று தெரிகிறது. பந்து நன்றாக பௌன்ஸ் ஆவது பௌலா்களுக்கு சற்று சாதகமளிக்கும். வானிலையால் எந்த இடையூறும் இல்லாமல் ஆட்டம் தொடரும்.

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சா்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் (வி.கீ.), நமன் திா், நிதீஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், குா்னூா் பிராா், முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங்.

நியூஸிலாந்து: வில் யங், டிம் செய்ஃபா்ட், டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், டாம் லாதம் (வி.கீ.), மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சேன்ட்னா் (கேப்டன்), நேதன் ஸ்மித், கைல் ஜேமிசன், மேத்யூ ஹென்றி, ஜேக்கப் டஃபி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.