
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 185 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைப் பற்றி...
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம்: ஏபி.
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் இன்று (நவ. 4) காலை ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் - டிம் செய்ஃபெர்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங், 9 ரன்களில் வில் யங்கின் விக்கெட்டை காலி செய்தார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸும் 9 ரன்களில் ஆட்டமிழக்க நிதனமாக விளையாடி 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

டி20 போட்டி தொடரில் மூன்று அரைசதங்கள், ஒரு சதம் விளாசிய க்ளென் ப்லிப்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ப்ளேர் டிக்னர் 1 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து குர்னூர் ப்ராரின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் ப்ரார் 3 விக்கெட்டுகளும், காம்போஜ் 2 விக்கெட்டுகளும் என 9 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்தினர். டேரில் மிட்செல் ரன்-அவுட்டானார்.
Summary
Invited to bat by India, New Zealand all out for 185 in first ODI at Auckland with pacer Arshdeep Singh claiming four wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




