மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தீவிரமாகப் பயிற்சிசெய்துவரும் புகைப்படம், விடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.
தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியினால் பாண்டியா புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் கருத்துகள் நிலவிவரும் நிலையில், நாளைய (மே.14) போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவந்த ஹார்திக் பாண்டியா பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் சென்றார். அங்கு முதல் சீசனில் கோப்பையும் இரண்டாவது சீசனில் ரன்னர் அப் ஆகவும் அணியை வழிநடத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹார்திக் பாண்டியாவை 2023ல் நியமித்தது. 2024 சீசன் மோசமாக சென்றது. 2025 சீசனில் பிளே ஆஃப் வரைக்கும் முன்னேறிய மும்பை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியுற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மும்பை 3 போட்டிகளில் மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. அதில் பாண்டியா தலைமையில் 2 போட்டிகளிலும் சூர்யகுமார் தலைமையில் ஒன்றிலும் வென்றுள்ளன.
இந்த சீசனில் கடைசி 2 போட்டிகளில் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் பயிற்சி செய்துவரும் காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மும்பை அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் நாளை மோதவிருக்கிறது. இந்தப் போட்டியில் பாண்டியா விளையாடுவாரா இல்லையா என இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
Summary
Hardik Pandya in intense training! Will he play in tomorrow's match?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓரங்கட்டப்படும் ஹார்திக் பாண்டியா?

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

