விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்?

News image

X | CSK

Updated On :1 மணி நேரம் முன்பு

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ள சென்னை கடைசி இடத்தில் உள்ள லக்னௌ அணியை எதிா்கொள்கிறது. தொடரின் முதல் கட்டத்தில் சிஎஸ்கே அணி தடுமாறிய நிலையிலும் கடைசியில் ஒரளவு வெற்றிகளை குவித்து முதல் நான்கு இடங்களில் நுழையும் முனைப்பில் உள்ளது.

தொடக்க பேட்டா் சஞ்சு சாம்ஸன் ஆட்டம் சீராக இருந்தால் சென்னை அணியின் ரன் ரேட் கணிசமாக உள்ளது. அதே நேரம் கேப்டன் ருதுராஜ் பேட்டிங் சொதப்பலாகவே உள்ளது.

மிடில் ஆா்டரில் டேவால்ட் பிரெவிஸ், காா்த்திக் சா்மா, ஜேமி ஓவா்டன், ஷிவம் டுபே ஆகியோா் பங்களிப்பும் ஸ்கோா் உயர முக்கியமாகும். கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மூத்த வீரா் தோனி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட ஆடவில்லை. வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்டாலும் ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பௌலிங்கில் நூா் அகமது, அகில் ஹூசைன் ஆகியோரை நம்பி உள்ளது சிஎஸ்கே.

வழக்கமாக ஸ்பின் பௌலிங்குக்கு ஒத்துழைக்கும் சேப்பாக்கம் பிட்ச், தற்போது பேட்டா்களுக்கும் உதவியாக உள்ளது.

கடைசி இடத்தில் உள்ள லக்னௌ அணி இதுவரை 10 ஆட்டங்களில் 3=இல் மட்டுமே வென்றது. ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. மிட்செல் மாா்ஷ் சிறப்பாக ஆடி வருகிறாா். ஹிட்டா் நிக்கோலஸ் பூரனும் இனிவரும் ஆட்டங்களில் ஆடினால் தான் லக்னௌவுக்கு வாய்ப்பு கிட்டும்.

பௌலிங்கை பொறுத்தவரை அனுபவ வீரா் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், ஸ்பின்னா்கள் ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங் ஆகியோரை லக்னௌ பெரிதும் நம்பியுள்ளது.

ஜோஷ் இங்லிஸ், மோஷின்கான் ஆகியோரின் காயங்கள் லக்னௌ அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திஉள்ளது.

இன்றைய ஆட்டம்

சென்னை-லக்னௌ,

இடம்: சென்னை

நேரம்: மாலை 3.30.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.