மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரோஹித் சர்மா 2.0 ஆதிக்கம் செலுத்த தயார்: அனில் கும்ப்ளே

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

News image

பந்தை சிக்ஸருக்கு விளாசும் ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :30 மார்ச் 2026, 6:29 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்களும், ரிக்கல்டான் 43 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ரோஹித் சர்மா தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவரது 2.0 அவதாரத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவரது அதிரடியான இன்னிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தயார் என்பதைக் காட்டுகிறது. அவர் திடலின் அனைத்துப் புறங்களிலும் ஷாட்டுகளை விளையாடியது இளமைப் பருவ ரோஹித் சர்மாவை எனக்கு நினைவுப்படுத்தியது.

வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் பிளெஸ்ஸிங் முசராபானி ஆகியோரின் பந்துவீச்சில் சிக்ஸர்கள் விளாசுவது அவ்வளவு எளிது கிடையாது. ஆனால், ரோஹித் சர்மா அதனை மிகவும் சாதாரணமாக செய்து காட்டினார். அவரது உடல்தகுதிக்காக அதிகம் உழைத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அவர் அற்புதமாக விளையாடினார். அவரது அதிரடியான ஆட்டம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Summary

Former Indian captain Anil Kumble has stated that Rohit Sharma is ready to dominate the ongoing IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.