மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விமர்சித்த ரஹானே!

கேமரூன் கிரீன் பந்துவீசாதது குறித்து கடுமையாகப் பேசிய ரஹானேவின் பேட்டி குறித்து...

News image

கேமரூன் கிரீன் - படம்: கேகேஆர்

Updated On :30 மார்ச் 2026, 12:31 pm IST

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் பந்துவீசாதது பேசுபொருளாகியுள்ளது.

டாஸ் வென்ற மும்பை பந்துவீச, கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் கேகேஆர் அணியினால் எடுக்கப்பட்டார். இவ்வளவு விலைக் கொடுத்தும் அவர் பந்துவீசாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். கேமரூன் கிரீன் பந்துவீசி இருந்தால் ஷர்துல் தாக்குரைப் போல விக்கெட் வீழ்த்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, “இந்தக் கேள்விக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் பதிலளிக்க வேண்டும்” எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையிலேயே ஃபார்மில் இல்லாத கேமரூன் கிரீனை அணியில் எடுத்தது தவறான முடிவாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Summary

KKR captain Rahane takes swipe at Cricket Australia over record signing Green.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.